நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தல்: தேசிய முன்னணி வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகிறது 

மலாக்கா: 

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடும் 

மலாக்கா மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ கூறினார் 

வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என்று பெங்காலான் பத்துவில் உள்ள தேசிய முன்னணி நடவடிக்கை அறையைப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் 

அதே நேரத்தில், மாநில தேசிய  முன்னணி தலைவர், நவம்பர் 14 அன்று நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவுக்கு முன்னதாக பிஎன் அமைப்பின் பணிகள் மேலும் மேலும் ஊக்கமளிப்பதாக இருந்து வருவதாகவும், அதன் மீது நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறினார்.

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset