நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரின் விசாரணை போலிஸ் தரப்பிடம் ஒப்படைப்பு: AGC அலுவலகம் தகவல்

பெட்டாலிங் ஜெயா: 

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாரின் விசாரணை அறிக்கைகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக போலிஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது என்று சட்டத்துறை அலுவலகம் AGC தெரிவித்தது 

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி போலிஸ் தரப்பு வழங்கிய இந்த விசாரணை அறிக்கையை தங்கள் தரப்பு மதிப்பீடு செய்துவிட்டதாக AGC அலுவலகம் விளக்கம் அளித்தது 

ஒரு முழுமையான விசாரணையின் முடிவுகளின்படி, எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னர், விசாரணை அதிகாரியால் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணை அறிக்கைகள் இன்று போலிஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணை குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 506இன் கீழ் விசாரணை செய்யப்பட்டது 

செப்டம்பர் 5 அன்று, சர்ச்சைக்குரிய ஒன்று உட்பட நான்கு உண்டாங், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார் பதவியிலிருந்து நீக்கும் பிரகடனப் பத்திரத்தில் இஸ்மாயில் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்டது.

பிறகு கட்டாயத்தின் பேரில் அவர் கையெழுத்திட்டதாக மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இந்த சம்பவம் காரணமாக போலிஸ் புகார் ஒன்றை மேற்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset