நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நபிவழியை உயிர்ப்பிப்போம்: பினாங்கு மஸ்ஜித் கப்பித்தான் பள்ளியில் மாபெரும் ஒன்றுகூடல் 

பினாங்கு:

பினாங்கு மஸ்ஜித் கப்பித்தான் பள்ளியில் அக்டோபர்  23.10.2026  மற்றும் 24.10.2026 (வெள்ளி , சனி) ஆகிய இருதினங்கள் மாபெரும் சலவாத் மஜ்லிஸ்  நடைப்பெற்றது. 

இதில் 23:10:2026 வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ராத்திபு  ஜலாலிய்யா மஜ்லிஸ்  கப்பித்தான் பள்ளியின்  தலைமை இமாம் ஜியாவுல் ஹக்  பாகவி அவர்கள்  தலைமையில் நடைப்பெற்றது .

இஷா தொழுகைக்கு பிறகு மெளலவி செய்யத்  அலவி ஸாலிஹ் மெளலானா அல்முர்ஸி  சுன்னத்தான வழிமுறைகளை ஹயாத்தாக்குவோம்  என்ற தலைப்பிலே சொற்பொழிவாற்றினார்கள்.  

இதிலே 500 க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  மறுநாள் 24: 10:2026 சனிக்கிழமை ளுஹர்  தொழுகையில் இருந்து  இஷா தொழுகை வரை கஸீதா, ஸலவாத், திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. 

இதிலே  மெளலானா உஸ்தாத் ஹாஜி யூசுப் பின் யாக்கூப் அவர்கள் (மலாய் மொழியில்) சொற்பொழிவாற்றினார்கள். 

பினாங்கு மாநிலத்தின்  முஃப்தி டத்தோ முஹம்மத் சுக்கி பின் ஒத்மான் அவர்கள்  இந்த நிகழ்ச்சியிலே கலந்து சிறப்பித்தார்கள். 

மேலும் இந்நிகழ்ச்சியில் மத்ரஸா நூருல் ஈ.மான் ஆசிரியர்கள், மாணவர்கள்  உட்பட உள்ளுர், வெளியூர் உலமாக்கள்; சமுதாய தலைவர்கள்; பொது மக்கள்  என சுமார்  இரண்டாயிரம் பேர் கலந்து பயணடைந்தனர். 

இறுதியாக பள்ளியின் தலைவர் டத்தோ ஹாஜி பாரூக் ராஜா முஹம்மது முக்கியப் பிரமுகர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி நன்றியுரையுடன் ஸலவாத் மஜ்லிஸ் இனிதே  நிறைவு பெற்றது.

- பினாங்கு யூசுப்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset