செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ சரவணனுக்கு எதிரான வழக்கு விசாரணை: அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது
கோலாலம்பூர்:
முன்னாள் மனிதவள டத்தோஸ்ரீ எம். சரவணன் மீதான வழக்கின் விசாரணையை, அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் மாதத்திற்கு இடைப்பட்ட பல்வேறு தேதிகளில் நடத்த செஷன்ஸ் நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்ருல் தாருஸ் இதனை இன்று அறிவித்தார்.
அந்நிய தொழிலாளர்கள் பணியமர்த்தும் விவகாரம் தொடர்பில் எம்ஏசிசி வழக்கை முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த வழக்கின் நிர்வாகம் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி அஸ்ருல் தாரஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வரும் மார்ச் 4, ஏப்ரல் 12, மே 24 முதல் 27 வரை, ஆகஸ்ட் 17 முதல் 19 வரை ஆகஸ்ட் 23 முதல் 25 வரையிலான தேதிகளை விசாரணைக்கான நாட்களாக நீதிபதி நிர்ணயித்தார்.
இந்தத் தேதிகள் அரசுத் தரப்பு, தற்காப்புத் தரப்பு ஆகிய இரு தரப்பினரின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டன.
டத்தோஸ்ரீ சரவணனின் தற்காப்புத் தரப்பினர், விசாரணையை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியிருந்தனர்.
முன்னதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜுலைலா ஜமாலுடின், 31 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை இன்று காலை தற்காப்புத் தரப்பிடம் ஒப்படைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்சென்ட் உறுதிப்படுத்தினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 51ஏ-இன் படி, அரசுத் தரப்பு அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது.
இது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 62-இன் படி, எதிர் தரப்பு தனது தற்காப்பு அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிக்க அரசுத் தரப்பு மொத்தம் 25 சாட்சிகளை அழைக்கும் என்றும் அவர் கூறினார்.
பின்னர், எதிர் தரப்பு தனது தற்காப்பு அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
