நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.16 டன் கெட்டமைன் ஏற்றிச் சென்ற கப்பல்: பலரைக் போலிஸ் தேடி வருகிறது

கோலாலம்பூர்:

சமீபத்தில் ஒரு டேங்கர் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட 1.16 டன் கெட்டமைன் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மேலும் பலரைக் போலிஸ் தேடி வருகிறது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சமீபத்தில், நாங்கள் இரண்டு நபர்களைக் கைது செய்தோம். அவர்களுக்கான நீதிமன்றக் காவல் காலம் முடிவடைந்துள்ளது.

அவர்கள் தற்போதைக்குக் போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset