நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DEEPAVALI BANGSA JOHOR 2026 கொண்டாட்டம்: ஜொகூர் வாழ் இந்திய சமூகத்திற்கு 5.37 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநில அளவிலான தீபாவளி பங்சா ஜொகூர் 2026 கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்றிரவு தம்போய் இண்டாவில் சிறப்பாக நடைபெற்றது 

ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொருள் கூடைகள் வழங்க 3.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் 63 இடங்களில் 54,000 KOMBO KASIH  தொகுப்புகளை வழங்குவதற்காக JUAL KASIH JOHOR திட்டத்தின் கீழ் RM1.87 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் மாநில தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி, ம.இ.கா தொடர்புக்குழு தலைவர் டத்தோ ரவின் குமார்,  ஜொகூர் மாநில இந்திய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset