செய்திகள் மலேசியா
டேசா துன் ரசாக்கில் கலவரம்: 9 பேர் கைது
பெட்டாலிங் ஜெயா:
டேசா துன் ரசாக்கில் உள்ள ஓர் உணவகத்தின் முன் நிகழ்ந்ததாக சொல்லப்படும் கலவரத்தைத் தொடர்ந்து போலிஸ் 9 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மர்சுஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
நேற்றிரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் வணிக பகுதியைத் தொடர்பான கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த கலவரம் பெரிதாக வெடித்ததாக அவர் சொன்னார்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, சுங்கை பெசி காவல் நிலையத்தின் வாகன ரோந்துப் பிரிவு (URB), செராஸ் உள்நாட்டுக் காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பிற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
கலவரம் நடந்ததாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து சுங்கை பீசி போலிஸ் நிலையத்திலிருந்து ரோந்து பணி போலிஸ் அதிகாரிகள், செராஸ் போலிஸ் குற்றப்புலனாய்வு துறை போலிஸ் அதிகாரிகள் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
சந்தேக நபர்கள் யாவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 148இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது
பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து எந்தவொரு ஆருடங்களையோ யூகங்களையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 1:41 pm
55 திட்டங்களுக்கு என்ன நடந்தது? புதிய ஆணை கோரும் முன் பதில் அளிக்க வேண்டும்: சிவமலர்
November 2, 2026, 12:37 pm
டிஎஸ்கே குழுவினரின் தீபாவளி அன்பளிப்புகள்; அடுத்தாண்டு 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்: டத்தோ சிவக்குமார்
November 2, 2026, 12:20 pm
7.2 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி: ஆபத்தான நிலையில் உள்ள இளைஞர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது
November 2, 2026, 12:13 pm
50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜிப் இன்னும் செலுத்தவில்லை: சட்டத்துறை தலைவர்
November 2, 2026, 11:52 am
வணிக வளாகத்தில் இரு சிறுவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்ட பெண்மணி: போலிஸ் விசாரணை
November 1, 2026, 9:24 pm
நம்பிக்கை கூட்டணியின் மலாக்கா முதலமைச்சர் வேட்பாளர் அட்லி சஹாரி
November 1, 2026, 9:15 pm
