செய்திகள் மலேசியா
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி: டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து சிறப்பிப்பு
கோலாலம்பூர்:
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாட்டின் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் உறவுப்பாலமாக பத்திரிகையாளர்கள் விளங்குகிறார்கள். அவர்களின் சேவைகளை நாம் என்றென்றும் போற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மறைந்த என் தந்தை கர்ப்பால் சிங் சில வழக்குகள் சம்பந்தமாக அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துவர். ஏனெனில் சட்டத்தில் நிறைய விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் என் தந்தையை சந்திக்க வருவார்கள்.
அதனால் பத்திரிகையாளர்கள் எங்கள் குடும்பத்துடன் நீண்ட கால நட்பினை கொண்டிருக்கின்றனர் என்றார்.
இந்நிலையில் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட வேளையில் டிஜிட்டல் அமைச்சின் வழி பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக பலத்த கரகொலிக்கு மத்தியில் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் ஷெங்கா மண்டபத்தில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடந்தேறியது
இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உணவுக்கூடைகள் வழங்கப்பட்டன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 4:56 pm
ஜொகூர் பாருவில் கேடிஎம்பி (KTMB) சரக்கு ரயிலில் தீ விபத்து: உயிர்ச்சேதம் ஏதுமில்லை
November 2, 2026, 4:43 pm
ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பணிக்கு டத்தோஸ்ரீ சுஹாய்லி மீண்டும் திரும்பியுள்ளார்
November 2, 2026, 4:42 pm
இரண்டு பிள்ளைகளை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் குறித்து போலிஸ் விசாரணை
November 2, 2026, 4:41 pm
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக கென்னத் கண்ணா தேர்வு
November 2, 2026, 4:31 pm
BANANA BRO, BOAT NOODLES உணவகங்களின் நிறுவனர் டோனி லிம் காலமானார்
November 2, 2026, 4:21 pm
DANA INOVASI MEDIA 2.0: உள்ளூர் ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை உயர்த்தும் திட்டம்
November 2, 2026, 3:43 pm
