நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் மாலை வேளையில் கனமழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா தகவல் 

கோலாலம்பூர்: 

நாடு முழுவதும் மாலை வேளையில் கனமழை, சூரைக்காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் மாலை 4மணி வரை கடும் மழையும் சூரைக்காற்றும் வீசும் என சொல்லப்படுகிறது.

கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளிலும் மழை பொழியும் என்று மெட் மலேசியா தெரிவித்தது

நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மெட் மலேசியா குறிப்பிட்டது 

அண்மைய வானிலை தொடர்பான தகவல்களைப் பெற பொதுமக்கள் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை வலம் வரலாம்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset