நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

55 திட்டங்களுக்கு என்ன நடந்தது? புதிய ஆணை கோரும் முன் பதில் அளிக்க வேண்டும்: சிவமலர்

மலாக்கா:

மலாக்கா மாநிலத்தில் தொடங்கப்படாமல் இருந்ததாக அறிவிக்கப்பட்ட 55 மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் முதலில் விளக்கமளிக்க வேண்டும்.

கெஅடிலான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி, மாநிலத்தின் மொத்தம் 241 மேம்பாட்டுத் திட்டங்களில் 86 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், 100 திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், எஞ்சிய 55 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

மேலும், 88 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டு நிதியில், 2025 மே 31ஆம் தேதி நிலவரப்படி 19.52 மில்லியன் ரிங்கிட் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. இது மொத்த ஒதுக்கீட்டில் 22.18 விழுக்காடாகும்.

இந்நிலையில், ஏறத்தாழ 17 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்த 55 திட்டங்களில் எத்தனை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன, எத்தனை நிறைவடைந்துள்ளன, இன்னும் எத்தனை திட்டங்கள் தாமதமாகியுள்ளன என்பது குறித்து மாநில அரசு தற்போதைய நிலவரத்தை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும், நிலம் தொடர்பான பிரச்சினைகள், தொழில்நுட்ப அனுமதிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படும் தாமதங்கள் போன்ற காரணங்களால் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இருப்பினும், இத்தகைய நிர்வாகத் தடைகளைத் தொடர்ந்து காரணமாகக் கூறிக்கொண்டிருக்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும் அரசு முன்வைக்க வேண்டும்.

எனவே 55 திட்டங்களின் முழுமையான பட்டியல், திட்டங்கள் அமைந்துள்ள இடங்கள், ஒதுக்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட அமலாக்க நிறுவனங்கள், தற்போதைய செயல்பாட்டு நிலை, நிறைவு செய்யப்பட வேண்டிய காலக்கெடு ஆகிய விவரங்களை மாநில அரசு வெளியிட வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டமும் உண்மையான பலனை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

திட்டங்கள் நிறைவடைந்திருந்தால் அதன் முடிவுகளை மக்களிடம் காட்ட வேண்டும். தாமதமாகியிருந்தால் அதற்கான காரணங்களையும் தீர்வுத் திட்டங்களையும் விளக்க வேண்டும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset