செய்திகள் மலேசியா
DANA INOVASI MEDIA 2.0: உள்ளூர் ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை உயர்த்தும் திட்டம்
கோலாலம்பூர்:
மலேசிய ஊடகங்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும், தொழில்நுட்பத் திறனை உயர்த்தவும் DANA INOVASI MEDIA 2.0 ஒரு முக்கியத் தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமெடுத்து வரும் டிஜிட்டல் சவால்களுக்கு மத்தியில், உள்ளூர் ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து நிலைத்து நிற்பதை உறுதி செய்ய இந்த நிதி வழிவகுக்கும்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியாலும், டிஜிட்டல் தளங்களின் கடும் போட்டியினாலும் ஊடகத்துறை சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த உதவி சரியான நேரத்தில் கிடைத்துள்ளதாக மலேசிய ஊடக மன்றத்தின் (MMM) தலைவர் டான் ஸ்ரீ நளினி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த நிதியைப் பெறும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் காரணமின்றி வேலைநீக்கம் செய்யக் கூடாது எனத் தொடர்பாடல் அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்தியிருந்தார்.
உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஊடகவியலாளர்களின் மனித உழைப்பும் நேர்மையும் இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்டிய டான் ஸ்ரீ நளினி, அமைச்சரின் இந்த எச்சரிக்கையை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.
சமுதாயத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்துச் நடுநிலையோடு இயங்கும் ஊடகங்களின் பங்கு சிதைந்துவிடக் கூடாது என்பதில் அவர் கவனத்தைச் செலுத்தினார்.
எனவே, ஊடகங்கள் நிதி நெருக்கடியின்றிச் செயல்பட ஒரு நிலையான வணிக மாதிரியை (Sustainable Business Model) உருவாக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலால் அறிவிக்கப்பட்ட இந்த 30 மில்லியன் ரிங்கிட் திட்டம், தேசிய செய்தியாளர் தினத்தை (HAWANA) முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த தொலைநோக்கு திட்டத்தின் தொடர்ச்சியாகும்.
பயிற்சி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் தழுவல், வன்பொருள் உபகரணங்கள், உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் செய்திச் சேவை சந்தாக்கள் ஆகிய 5 முக்கியப் பிரிவுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
விருப்பமுள்ள ஊடக நிறுவனங்கள் நேற்று முதல் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வரை தொடர்பாடல் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 4:56 pm
ஜொகூர் பாருவில் கேடிஎம்பி (KTMB) சரக்கு ரயிலில் தீ விபத்து: உயிர்ச்சேதம் ஏதுமில்லை
November 2, 2026, 4:43 pm
ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பணிக்கு டத்தோஸ்ரீ சுஹாய்லி மீண்டும் திரும்பியுள்ளார்
November 2, 2026, 4:42 pm
இரண்டு பிள்ளைகளை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் குறித்து போலிஸ் விசாரணை
November 2, 2026, 4:41 pm
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக கென்னத் கண்ணா தேர்வு
November 2, 2026, 4:31 pm
BANANA BRO, BOAT NOODLES உணவகங்களின் நிறுவனர் டோனி லிம் காலமானார்
November 2, 2026, 3:43 pm
