செய்திகள் மலேசியா
சிலாங்கூர் SRC அமைப்பின் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி: பி40 இந்திய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன
கோலாலம்பூர்:
சிலாங்கூரின் SELANGOR RECREATIONAL CLUB அமைப்பின் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை செந்துல் SRC அமைப்பின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது
இவ்வாண்டு தீபாவளி உணவுக்கூடைகள் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கு கொடுக்கலாம் என்று ம.இ.காவை சேர்ந்த டத்தோ ஏ.கே. இராமலிங்கம் தலைமையில் உணவுக்கூடைகளை வழங்கினோம்.

இந்த நிகழ்ச்சியில் 56 குடும்பங்களைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த தீபாவளி உணவுக்கூடைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துசாமி குறிப்பிட்டார்

மேலும், சிலாங்கூர் SRC அமைப்பின் நல்லெண்ண விருந்தும் உடற்பயிற்சி கூடத்தையும் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இவ்வேளையில் மலேசிய வாழ் அனைத்து இந்து பெருமக்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் என்று SRC அமைப்பினர் தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் SRC அமைப்பின் தலைவர் ரவிந்திரநாத், ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் முத்துசாமி, K.T..பாலா, பொருளாளர் அரவிந்தன், GC உறுப்பினர்கள் விஜயக்குமார், லாரன்ஸ், ஜனார்தன், கார்த்திகேசு, பிரேம்குமார், TRUSTEES மேஜர் ஷான், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 2:54 pm
கடலடி சுரங்கப்பாதைக்கு மாற்றாக மூன்றாவது பாலத்தை ஆய்வு செய்கிறது பினாங்கு மாநில அரசு
November 2, 2026, 1:41 pm
55 திட்டங்களுக்கு என்ன நடந்தது? புதிய ஆணை கோரும் முன் பதில் அளிக்க வேண்டும்: சிவமலர்
November 2, 2026, 1:00 pm
டேசா துன் ரசாக்கில் கலவரம்: 9 பேர் கைது
November 2, 2026, 12:37 pm
டிஎஸ்கே குழுவினரின் தீபாவளி அன்பளிப்புகள்; அடுத்தாண்டு 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்: டத்தோ சிவக்குமார்
November 2, 2026, 12:20 pm
7.2 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி: ஆபத்தான நிலையில் உள்ள இளைஞர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது
November 2, 2026, 12:13 pm
50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜிப் இன்னும் செலுத்தவில்லை: சட்டத்துறை தலைவர்
November 2, 2026, 11:52 am
வணிக வளாகத்தில் இரு சிறுவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்ட பெண்மணி: போலிஸ் விசாரணை
November 1, 2026, 9:24 pm
