நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜிப் இன்னும் செலுத்தவில்லை: சட்டத்துறை தலைவர்

கோலாலம்பூர்:

சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு கிடைத்த சமீபத்திய தகவலின்படி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ ரஜிப் தனக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்னும் செலுத்தவில்லை.

சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் குடிமைத் தத்தெடுப்புப் பள்ளி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர், அதன் தலைபர் டான்ஸ்ரீ முகமது டுசுகி மொக்தார் செய்தியாளர்களிடம் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி அபராதம் செலுத்தத் தவறினால், நஜிப் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று முகமது டுசுகி உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, செப்டம்பர் 18 அன்று, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தும் நிபந்தனையின் பேரில், நஜிப் தனது மீதமுள்ள தண்டனையை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset