நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் 12ஆவது ஒற்றுமை தீபாவளி பெருநாள் சிறப்பு கொண்டாட்டம்: டத்தோஶ்ரீ எம்.சரவணன் கலந்து சிறப்பிப்பு 

கோலலாம்பூர்:  

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடைபெற்ற 12வது மடானி ஒற்றுமை தீபாவளி நலத்திட்ட விழா மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகப் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

விழா மண்டபத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், மலேசியாவின் பன்முகக் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு இன மக்களின் பாரம்பரிய ஊர்வலத்துடன் முதன்மை மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த வரவேற்பு, வந்திருந்த அனைவரிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் இன ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தியது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த முக்கிய ஒருங்கிணைப்பாளர் திரு. அசோகன் மற்றும் அவரது சிறப்புக் குழுவினருக்குப் பங்கேற்பாளர்கள் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

திரளான மக்களை ஒன்றாக இணைத்து, ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்த இத்தீபாவளித் தொண்டு விழா, மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஒரு மறக்க முடியாத திருவிழா உணர்வை ஏற்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset