நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஎஸ்கே குழுவினரின் தீபாவளி அன்பளிப்புகள்; அடுத்தாண்டு 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

டிஎஸ்கே குழுவினரின் தீபாவளி அன்பளிப்புகள் அடுத்தாண்டு 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்.

டிஎஸ்கே அமைப்பு தலைவர் டத்தோ சிவக்குமார் இதனை கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு டிஎஸ்கே குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

இதன் அடிப்படையில் இன்று கிட்டத்தட்ட 500 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினோம். இந்த அன்பளிப்புகள் மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

மாணவர்களின் மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம். ஆக அடுத்தாண்டு முதல் 1,000 மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படும்.

இது எங்களின் இலக்கு என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset