செய்திகள் மலேசியா
வணிக வளாகத்தில் இரு சிறுவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்ட பெண்மணி: போலிஸ் விசாரணை
பெட்டாலிங் ஜெயா:
தலைநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பெண்மணி ஒருவர் இரு சிறுவர்கள் மீது கடுமையாக நடந்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை செய்கின்றனர்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரு நபர்களுக்கும் ஏற்பட்ட தகராறு குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது
டாங் வாங்கி போலிஸ் தலைவர் அஹ்மத் அஸ்வான் அமின் நோர்டின் கூறினார்.
இரு குழந்தைகளின் தந்தையிடமிருந்து இரவு 7.39 மணிக்கு காவல்துறைக்கு புகார் வந்ததாக அவர் கூறினார்.
சிறுவன் ஒருவன் கீழே விழும் அளவிற்கு பெண்மணி ஒருவர் நடந்து கொண்டதாக தெரிகிறது. மேலும், ஆடவர் ஒருவரையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது
சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி வருவதாக அஹ்மத் அஸ்வான் தெரிவித்தார்.
இது தொடர்பாக, இதுபோன்ற செயல்கள் விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் யூகங்கள் செய்வதோ, குற்றச்சாட்டுகளைப் பரப்புவதோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதோ கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 1:41 pm
55 திட்டங்களுக்கு என்ன நடந்தது? புதிய ஆணை கோரும் முன் பதில் அளிக்க வேண்டும்: சிவமலர்
November 2, 2026, 1:00 pm
டேசா துன் ரசாக்கில் கலவரம்: 9 பேர் கைது
November 2, 2026, 12:37 pm
டிஎஸ்கே குழுவினரின் தீபாவளி அன்பளிப்புகள்; அடுத்தாண்டு 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்: டத்தோ சிவக்குமார்
November 2, 2026, 12:20 pm
7.2 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி: ஆபத்தான நிலையில் உள்ள இளைஞர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது
November 2, 2026, 12:13 pm
50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜிப் இன்னும் செலுத்தவில்லை: சட்டத்துறை தலைவர்
November 1, 2026, 9:24 pm
நம்பிக்கை கூட்டணியின் மலாக்கா முதலமைச்சர் வேட்பாளர் அட்லி சஹாரி
November 1, 2026, 9:15 pm
