நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணியின் மலாக்கா முதலமைச்சர் வேட்பாளர் அட்லி சஹாரி

மலாக்கா: 

நம்பிக்கை கூட்டணி சார்பாக மலாக்கா மாநில முதலமைச்சர் வேட்பாளர் அட்லி சஹாரி தான் என்று தகவல்கள் வலுத்துள்ளன 

நம்பிக்கை கூட்டணி மலாக்காவில் வென்றால் அட்லி சஹாரி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 
 
தற்போது வரை புரிந்துணர்வு அடிப்படையில் மலாக்கா மாநிலத்தில் அட்லி சஹாரி தான் முதலமைச்சர் வேட்பாளர். 

இன்னும் மூன்று நாட்களில் மலாக்கா தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் அறிமுகம் செய்யப்படும். 

ரூமா கித்தா எனும் கருப்பொருளில் இந்த வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கும் என்று அவர் சொன்னார். 

16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 24 சட்டமன்ற இடங்களில் போட்டியிடுகிறது.

குறைந்தது 18 இடங்களில் வெற்றிக்கொள்ள நம்பிக்கை கூட்டணி இலக்கு கொண்டுள்ளது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset