நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்: சிலாங்கூர் மாநில கல்வி இலாகா தகவல்

ஷா ஆலம்: 

சிலாங்கூரில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று சிலாங்கூர் மாநில கல்வி இலாகா தெரிவித்தது 

புகைமூட்டத்தைத் தொடர்ந்து அனைத்து தரப்பும் மாணவர்களின் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி துறை கேட்டுக்கொண்டது 

பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்

மேலும், பெற்றோர்கள் புகைமூட்டத்தின் அண்மைய நிலவரங்களைத் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அமலாக்க தரப்பு செயல்படுத்தும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சிலாங்கூர் கல்வி இலாகா கேட்டுக்கொண்டது 

பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்து தரப்பும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தை மட்டும் நாட வேண்டும் என்று கல்வி இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset