நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல்: ஐந்து இடங்களை வெற்றிக் கொள்ள அமானா கட்சி இலக்கு

சுபாங் ஜெயா: 

மலாக்கா மாநில தேர்தலில்  அமானா கட்சி ஏழு இடங்களில் போட்டியிடுகிறது

இந்த தேர்தலில் அமானா கட்சி குறைந்தது ஐந்து இடங்களில் வெற்றிப்பெற இலக்கு கொண்டுள்ளது என்று அக்கட்சியின் துணைத்தலைவர் ஹத்தா ரம்லி கூறினார். 

ஏழு இடங்களில் ஐந்து இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இந்த முறை மலாக்கா தேர்தலில் அமானா கட்சி கோலா லிங்கி, டுரியான் துங்கால், தெலொக் மாஸ், மெர்லிமாவ், சுங்கை ரம்பாய், புக்கிட் கட்டில், ஆகிய சட்டமன்ற தொகுதிகளைத் தற்காக்க போட்டியிடுகிறது 

நம்பிக்கை கூட்டணி சார்பாக அட்லி சஹாரி மலாக்கா மாநில முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்று நம்பிக்கை கூட்டணி தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார். 

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து 28 சட்டமன்ற இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset