நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

எல் சார்டினோர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ரேசிங் சான்தாண்டர் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ரேசிங் சான்தாண்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, ஜூட் பெலிங்காம், யான் டியான்மோண்டே ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் கெதாஃபி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் எல்ஹி, அட்லாட்டிகோ பில்பாவ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset