நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நெய்மருக்கு இரண்டு ஆட்டங்களில் களமிறங்க தடை

பிரேசிலா:

பிரேசிலின் சிரி அ தொடரில் பஹியா வீரர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தனது வாயை மூடியதற்காக, சாண்டோஸ் அணியின் கேப்டன் நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் உச்ச விளையாட்டு நீதிமன்றம் இதனை தெரிவித்தது.

பஹியா அணியின் நடுக்கள வீரர் ரோட்ரிகோ நெஸ்டருடன் மோதியதைத் தொடர்ந்து 34 வயதான நெய்மருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. 

பின்னர், ஆடுகளத்தில் ஏற்படும் மோதல்களின்போது வீரர்கள் தங்கள் வாயை மூடுவதைத் தடைசெய்யும் வினிசியஸ் ஜூனியர் விதியை மீறியதற்காக விளையாட்டுத் தீர்ப்பாயம் அவரைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது.

ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிந்த அந்தப் போட்டியில், சிவப்பு அட்டை காட்டப்பட்ட பிறகு நெய்மர் தனது எதிராளியுடன் வாக்குவாதம் செய்வதற்காக விருந்தினர் அணியின் இருக்கையை நோக்கி ஓடினார்.

சக வீரர்களால் அவர் சமாதானப்படுத்தப்பட்டார் என்று நடுவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அந்நீதிமன்றம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset