நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு மென்செஸ்டர் சிட்டி  அணியினர் முன்னேறியுள்ளனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியுடன் சமநிலை கண்டனர்.

இதை தொடர்ந்து ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் சிறப்பாக செயல்பட்ட மென்செஸ்டர் சிட்டி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 6-5 என்ற பெனால்டி கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

சண்டர்லேண்ட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் ஏஎப்சி போர்னமௌத், கிறிஸ்டல் பேலஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset