நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் விருதை வென்றார்

லண்டன்:

தனது பாரம்பரிய போட்டியாளரான லியோனல் மெஸ்ஸியை வீழ்த்தி, கிறிஸ்டியானோ ரொனால்டோ எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குறைந்தது இரண்டு முறையாவது இந்த விருதை வென்ற ஒரு வீரரின் சிறந்த பருவத்தை அங்கீகரிக்கும் வகையில், அக்டோபர் 1 அன்று, 10 பலோன் டி'ஓர் வெற்றியாளர்களில் ஒருவரை எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் (B.O.A.T) ஆக முடிசூட்ட கால்பந்து ரசிகர்கள் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தற்போது, ​​இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 10 ஜாம்பவான்களில் ஒருவரான ரொனால்டோ, 2008இல் தனது முதல் பலோன் டி'ஓர் விருதை வென்ற பிறகு, வாக்கெடுப்பின் வெற்றியாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார்.

B.O.A.T. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது, ​​அந்த விருதுக்காக ரொனால்டோவுக்கும் மெஸ்ஸிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று பலர் எதிர்பார்த்ததில் ஆச்சரியமில்லை.

இருப்பினும், 2008இல் மென்செஸ்டர் யுனைடெட் அணி இங்கிலாந்து பிரிமியர் லீக், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை வெல்ல உதவியதோடு, லீக்கில் 31 கோல்கள் உட்பட அனைத்துப் போட்டிகளிலும் 42 கோல்கள் அடித்த ரொனால்டோவின் வெற்றியானது, அவருக்கு B.O.A.T. விருதை வெல்ல வழிவகுத்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset