நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா 20 பில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

ஜூரிச்:

அனைத்துலக கால்பந்து சம்மேளமான பிபா, இந்த ஆண்டு உலகக் கிண்ண டிக்கெட் விற்பனை, விருந்தோம்பல் தொகுப்புகள் மூலம் 20.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டாரில் நடைபெற்ற போட்டியை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

வட அமெரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக் கிண்ண போட்டியில், பிபா போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மற்றொரு நாக்-அவுட் சுற்றையும் அறிமுகப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, 104 போட்டிகளுடன் ஒரு புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2022 பதிப்புடன் ஒப்பிடுகையில் 40 போட்டிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதால், உலக கால்பந்து நிர்வாக அமைப்பானது டிக்கெட் விற்பனை மற்றும் விருந்தோம்பல் தொகுப்புகள் மூலம் சாதனை அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது.

பிபாவால் இன்னும் உறுதிப்படுத்தப்படாத இந்த 20.5 பில்லியன் ரிங்கிட் என்ற தொகையானது, அந்த அமைப்பின் ஆரம்பகட்ட எதிர்பார்ப்புகளை வெகுவாகத் தாண்டி, 60 பில்லியன் ரிங்கிட் என்ற ஒட்டுமொத்த உலகக் கிண்ண வருவாய்க்குப் பங்களித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset