நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ASEAN Records, ASIA Records விருதுகளை வென்ற ராஜி சில்க் பேலஸ் நிறுவனத்தினரை தெங்கு டத்தோ டாக்டர் ஹிஷாமுடின் ஜைசி பாராட்டினார்

கோலாலம்பூர்:

ASEAN Records, ASIA Records என இரு விருதுகளை வென்ற ராஜி சில்க் பேலஸ் நிறுவனத்தின் சாதனை பாராட்டுக்குரியது.

சிலாங்கூர் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் தெங்கு டத்தோ டாக்டர் ஹிஷாமுடின் ஜைசி இதனை கூறினார்.

ராஜி சில்க் பேலஸ் நாடு முழுவதும் 19 கிளைகளுடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

மேலும் வர்த்தகத்துடன் சமூக கடப்பாட்டுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜி சில்க் பேலஸ்
ASEAN Records, ASIA Records என இரு விருதுகளை வென்றுள்ளது.

அதே வேளையில் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்திலும் ராஜி சில்க் பேலஸ் இடம் பிடித்துள்ளது என எனக்கு தெரிவிக்கப்பட்டது.


இச்சாதனைகளை படைத்து வரும் ராஜி சில்க் பேலஸ் தலைமை இயக்குநர் டத்தோ அலி ஜின்னா, இயகுநர் கணேசன் உட்பட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

இச்சாதனை தொடர எனது வாழ்த்துகள் என்று தெங்கு டத்தோ டாக்டர் ஹிஷாமுடின் ஜைசி கூறினார்.

பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ராஜி சில்க் பேலஸ் இயக்குநர்களான டத்தோ அலி ஜின்னா, டத்தோ கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset