நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முடிவை கேரிக் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்

லண்டன்:

ஓல்ட் டிராபோர்டில் போர்ஸ்மௌத் அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் அடைந்த அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து, மைக்கேல் கேரிக்கைப் பணி நீக்கம் செய்வது குறித்து மென்செஸ்டர் யுனைடெட்டின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பெரும்பாலான வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தபோதிலும், மென்செஸ்டர் யுனைடெட்டின் தலைமை இயக்குநர் ஓமர் பெர்ராடா, கால்பந்து இயக்குநர் ஜேசன் வில்காக்ஸ் ஆகியோர் கேரிங்டன் பயிற்சி மைதானத்திற்கு வந்தனர்.

முதல் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாதபோதிலும், அணித் தலைவர் புருனோ பெர்னாண்டஸும் சிகிச்சைக்காக கேரிங்டனில் இருந்தார்.

வாரத்தின் நடுவில் கோமோ அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை அடைந்தது.

இதைத் தொடர்ந்து, கேரிக்கின் தந்திரோபாயங்கள் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்பட்டதால், போர்ஸ்மௌத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் இருந்து பெர்னாண்டஸ் நீக்கப்பட்டார்.

இருந்த போதிலும் மென்செஸ்டர் யுனைடெட் அவ்வாட்டத்தில் தோல்வி கண்டதால் கேரிக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset