செய்திகள் விளையாட்டு
17ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்டும் விருது விழாவை புறக்கணித்த மெஸ்ஸி
லண்டன்:
அனைத்துலக கால்பந்து உலகின் மிக உயரிய தனிநபர் விருதான பலோன் டி ஓர் விருது வழங்கும் விழாவில், சாதனை அளவாக 17ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்ட போதிலும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்காதது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 முறை பாலன் டி ஓர் விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, லண்டனில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவிற்கு செல்லாமல் அமெரிக்காவிலேயே தங்கி தனது நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் 'மெஸ்ஸி கப்' கால்பந்து தொடரைக் கவனிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்
மேலும் இந்தர்மியாமி அணியின் அடுத்தடுத்த ஆட்டங்கள், பயணக் களைப்பு காரணமாகவே மெஸ்ஸி லண்டன் பயணத்தைத் தவிர்த்துள்ளார்.
சமீபத்தில் ஸ்பெயினில் 'பிரின்சஸ் ஆஃப் அஸ்டூரியாஸ்' விருது பெற்றுத் திரும்பிய அவருக்கு முக்கிய மேஜர் லீக் போட்டிகள் உள்ளன.
இந்த நெருக்கடியான அட்டவணைக்கு நடுவே லண்டன் பயணம் செய்தால் போதிய ஓய்வு கிடைக்காது என்பதால் விழாவைப் புறக்கணித்துள்ளார்.
மேலும், அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை தெற்கு புளோரிடாவில் நடைபெறும் 'மெஸ்ஸி கப்' சர்வதேச 16 வயதுக்குட்பட்டோர் இளைஞர் கால்பந்து தொடரின் ஒருங்கிணைப்புப் பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 9:26 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் ஏமாற்றம்
October 27, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முடிவை கேரிக் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்
October 27, 2026, 10:31 am
உலகின் சிறந்த வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை ஹாரி கேய்ன் வென்றார்
October 27, 2026, 9:54 am
2027 ஏ.ஃப்.சி ஆசியா கிண்ண காற்பந்து போட்டி: சவுதி அரேபியா VS பாலஸ்தீனம் தொடக்க ஆட்டம்
October 26, 2026, 9:45 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 26, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 25, 2026, 9:41 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 25, 2026, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 24, 2026, 9:38 am
