செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளரின் ஒப்புதலை இஸ்மாயில் இன்னும் பெறவில்லை
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் சட்டமன்ற கூட்டத்தை நடத்த மந்திரி பெசார் முயற்சித்து வருவதாக நெகிரி செம்பிலான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ்ஸின் ஒப்புதலை இன்னும் பெறாத நிலையில் சட்டமன்ற கூட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது
இதற்கு முன்பு கூறியது போல் நெகிரி செம்பிலான் சட்டமன்றம் நவம்பர் 26ஆம் தேதி கூடும் வேளையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
இருப்பினும், ஒரு மாநில ஆட்சியாளரின் இணக்கம் பெறாமல் சட்டமன்ற கூட்டத்தை நடத்த முடியாது என்பது அரசியலமைப்பு விதியாகும்.
நெகிரி செம்பிலான் மாநில எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நெகிரி செம்பிலான் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு இன்னும் பெறவில்லை என்று மாநில DAP தலைவர் ஜே. அருள்குமார் கூறியிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நெகிரி செபிலான் மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது,
நடப்பு ஆட்சியாளரை பதவியிலிருந்து வீழ்த்தி புதிய ஒருவருக்கு ஆட்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் மாநில அரசாங்கத்தையும் அதன் நிர்வாகத்தையும் பெருமளவில் பாதித்துள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 5:38 pm
பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
October 30, 2026, 4:49 pm
மலாக்கா மாநில தேர்தல்: எம்.ஏ.சி.சி நடவடிக்கை அறையைத் திறக்கவுள்ளது
October 30, 2026, 4:25 pm
குளுவாங் நகராண்மை கழகத்தின் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு
October 30, 2026, 2:59 pm
