நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

இதனால் அவர்கள் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

கல்வி கற்பிக்கும் பணியை பள்ளிகளுக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ மட்டும் விட்டுவிடக்கூடாது என்றும், மாறாக குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்றும் பிரதமர்  அன்வார் குறிப்பிட்டார் 

பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்தக் குழந்தைகள் அனைவரும் சுத்தமாக இருப்பதையும், அன்பைக் காட்டுவதையும் பார்க்கும்போது, ​​என் மனம் மிகவும் நெகிழ்கிறது.

பள்ளி நடைமுறைகளில் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருப்பதை உறுதி செய்வதில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று பிரதமர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset