நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளுவாங் நகராண்மை கழகத்தின் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு

குளுவாங்: 

குளுவாங் நகராண்மை கழகத்தின் LED அகண்ட திரைகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் அதில் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

இந்த சம்பவம் தொடர்பாக போலிஸ் புகார் ஒன்று மேற்கொள்ளப்பட்டு அனைத்து LED திரைகளும் முடக்கம் செய்யப்பட்டதாக குளுவாங் நகராண்மை கழகம் தெரிவித்தது 

 ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் தொடர்பில் குளுவாங் நகராண்மை கழகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது 

சம்பவத்திற்கான காரணம் குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் என்று நகராண்மை கழகத்தினர் உறுதியளித்தனர். 

MPK தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியில் உள்ள அனைத்து LED திரைகளையும் மூடி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜொகூர் மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி செயற்குழு தலைவர் முஹம்மத் ஜாஃப்னி முஹம்மத் ஷுகோர் கூறினார். 

MPK LED திரை ஹேக் செய்யப்பட்டு ஆபாச படம் ஒளிபரப்பட்டது. குளுவாங் ஏரிச் சதுக்கம், குளுவாங் நகரில் உள்ள இன்டான் பூங்கா மற்றும் கஹாங்கிற்குச் செல்லும் வழியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஒளிபரப்பு செய்யப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset