செய்திகள் மலேசியா
குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகள் போராட்டத்தில் டான்ஸ்ரீ நளினியின் பங்களிப்புக்கு துணையமைச்சர் தியோ நீ சிங் பாராட்டு
கோலாலம்பூர்:
முன்னாள் கூட்டரசு நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதனின் பங்களிப்பையும், குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான முக்கிய வழக்குகளில் அவர் எடுத்த உறுதியான நிலைப்பாட்டையும் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் பாராட்டினார்.
ஒரு தாயார் என்ற முறையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமக்கு, டான்ஸ்ரீ நளினியின் தீர்ப்புகள் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளதாகத் தியோ தெரிவித்தார்.
குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு CTEB & Anor v. தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர் வழக்கில் அவர் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
அந்த வழக்கில், கூட்டரசு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள 'தந்தை' என்ற சொல்லின் விளக்கம், உயிரியல் ரீதியான தந்தை உறவு மற்றும் பெற்றோரின் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது தொடர்பான அம்சங்கள் ஆராயப்பட்டன.
மேலும், 2021-இல் CCH & Anor v. பிறப்பு மற்றும் இறப்பு பதிவுத் துறை தலைமைப் பதிவாளர் வழக்கையும் தியோ சுட்டிக்காட்டினார்.
மலேசிய தம்பதியினரால் தத்தெடுக்கப்படும் வேறொரு குழந்தையின் குடியுரிமையை நீதிமன்றம் அங்கீகரித்த வழக்காக இது அமைந்தது.
“அன்மையில் டான்ஸ்ரீ நளினியை நேரில் சந்தித்து, அவரது பங்களிப்புகள் எனக்கு எந்த அளவுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளன என்பதைத் தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். குடியுரிமையற்ற குழந்தைகளுக்கும், உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் அவரது கொள்கை உறுதியும் துணிச்சலும் நம்பிக்கையின் ஆதாரமாகத் திகழ்கின்றன,” என்றார்.
நீதியை நிலைநாட்டுவதுடன், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகளையும், எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தியோ வலியுறுத்தினார்.
கடந்த ஜூன் மாதம், டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் மலேசிய ஊடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 2:59 pm
துவாங்கு முஹ்ரிஸுக்கு எதிராக இழிவான பதிவு: இருவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
October 30, 2026, 12:42 pm
மலேசியாவில் ரோஹின்யா அகதிகளுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது: ஜாஹித்
October 30, 2026, 12:41 pm
உறவை முறித்துக்கொள்ள விரும்பியதால் பெண் மீது அமிலம் வீசப்பட்டது
October 30, 2026, 12:41 pm
கடந்த ஆண்டு 80,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன
October 30, 2026, 12:40 pm
தீபாவளி பதிவு செய்யப்படாத விடுப்புத் தளர்வு குறித்து பொதுச் சேவைத் துறை பரிசீலிக்க வேண்டும்: லிங்கேஸ்வரன்
October 30, 2026, 11:27 am
பெட்ரோனாஸ் 152.4 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளது: அஸாலினா
October 30, 2026, 11:26 am
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 முதல் 11 பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: அர்மிசான்
October 30, 2026, 11:25 am
