செய்திகள் மலேசியா
தீபாவளி பரிசாக பேரா மாநிலத்தில் இரு இந்து ஆலயங்களுக்கு நிலப்பட்டா; 80 ஆண்டுக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
தீபாவளியை முன்னிட்டு பேரா மாநில அரசாங்கம் இந்து ஆலயங்களின் நீண்டகால நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புந்தோங் பகுதியில் அமைந்துள்ள இரண்டு ஆலயங்களுக்கு நாளை 31ஆம் தேதி நிலப்பட்டாக்களை வழங்கவுள்ளது.
இது குறித்து பேரா மாநில அரசாங்கச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.
புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தலைமையில் நாளை இரவு நடைபெறவுள்ள தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் இந்த நிலப்பட்டாக்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, புந்தோங் காவல் நிலையத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டா வழங்கப்படும்.
80 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இதுவரை நிலப்பட்டா இல்லாமல் இருந்து வந்துள்ளது.
தற்போது அந்த ஆலயத்தின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு நிலப்பட்டா வழங்கப்படவிருப்பதாக தெரிவித்தார்.
அதே போல், புந்தோங்கில் அமைந்துள்ள மற்றொரு பிரசித்தி பெற்ற சிவன் ஆலயத்திற்கான நிலம் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதன் உரிமை தொடர்பான ஆவணங்கள் நீண்டகாலமாக அரசிதழில் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இருந்தன.
இந்நிலையில், அந்த ஆலயத்திற்கான நிலத்தை அரசிதழில் முறைப்படி பதிவு செய்யும் நடவடிக்கையைத் தமது தரப்பு முன்னெடுத்து, அதிகாரப்பூர்வ அரசிதழ் ஆவணத்தையும் ஆலய நிர்வாகத்திடம் ஒப்பபட ஙிருப்பதாக விளக்கினார்.
மேலும், தம்புனில் அமைந்துள்ள ஏழு கன்னிகள் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பேரா மாநிலத்தில் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலம் தொடர்பான பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஆலயங்களின் நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆலய நிர்வாகங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 5:43 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளரின் ஒப்புதலை இஸ்மாயில் இன்னும் பெறவில்லை
October 30, 2026, 5:38 pm
பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
October 30, 2026, 4:49 pm
மலாக்கா மாநில தேர்தல்: எம்.ஏ.சி.சி நடவடிக்கை அறையைத் திறக்கவுள்ளது
October 30, 2026, 4:25 pm
குளுவாங் நகராண்மை கழகத்தின் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு
October 30, 2026, 2:59 pm
