செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரகாஷ்
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நான் மிகவும் தீவிரமாகக் கருதுகிறேன்.
தேசியப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகள், தேசிய இடைநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட தகுதி மற்றும் அங்கீகாரத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு பெறும் ஏனைய பள்ளிகளுக்கும் இந்த விவகாரம் பொருந்தும் என்று கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறினார்.
பள்ளிகள் தங்களுக்குத் தேவையான பழுதுபார்ப்புப் பணிகள், பராமரிப்புப் பணிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும்.
இது மாணவர்களின் வசதி, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமாகும்.
நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் பள்ளிகளின் திட்டமிடலைப் பாதிப்பதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பழுதுபார்ப்பு, மேம்பாட்டுப் பணிகளும் தாமதமடையக் காரணமாகிறது.
இதனால் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைக்கூட உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, மாநில அரசும் சம்பந்தப்பட்ட துறைகளும் பின்வரும் விவரங்கள் குறித்து உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்கள் என்ன?
ஒவ்வொரு பள்ளியின் விண்ணப்பம் மற்றும் நிதி வழங்கும் நடைமுறையின் தற்போதைய நிலை என்ன?
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தேதி எது?
ஆவணங்கள் அல்லது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் என்ன?
தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, முறையான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள பள்ளிகளுக்கான நிதி வழங்கும் நடவடிக்கைகள் மேலும் தாமதமின்றி விரைவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏதேனும் ஆவணக் குறைபாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாகத் தெரிவித்து, அவற்றைச் சரிசெய்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 2:59 pm
துவாங்கு முஹ்ரிஸுக்கு எதிராக இழிவான பதிவு: இருவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
October 30, 2026, 12:42 pm
மலேசியாவில் ரோஹின்யா அகதிகளுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது: ஜாஹித்
October 30, 2026, 12:41 pm
உறவை முறித்துக்கொள்ள விரும்பியதால் பெண் மீது அமிலம் வீசப்பட்டது
October 30, 2026, 12:41 pm
கடந்த ஆண்டு 80,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன
October 30, 2026, 12:40 pm
தீபாவளி பதிவு செய்யப்படாத விடுப்புத் தளர்வு குறித்து பொதுச் சேவைத் துறை பரிசீலிக்க வேண்டும்: லிங்கேஸ்வரன்
October 30, 2026, 11:27 am
பெட்ரோனாஸ் 152.4 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளது: அஸாலினா
October 30, 2026, 11:26 am
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 முதல் 11 பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: அர்மிசான்
October 30, 2026, 11:25 am
