செய்திகள் மலேசியா
தீபாவளியை முன்னிட்டு பொது உயர்க்கல்விக்கூடங்களில் படிக்கும் இந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள் இயங்கலை வாயிலாக கற்றல் கற்பித்தலில் ஈடுபடலாம்
பெட்டாலிங் ஜெயா:
தீபாவளியை முன்னிட்டு பொது உயர்க்கல்விக் கூடங்களில் பயிலும் இந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள் யாவரும் இயங்கலை வாயிலாக கற்றல் - கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடலாம்
எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை இந்த விதிமுறை அமலில் இருக்கும் என்று உயர்க்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
தீபாவளியைக் கொண்டாடும் மாணவர்களும் விரிவுரையாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி, குடும்பத்தினருடன் நேரம் செலவிட இடமளிப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
தடையற்ற கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையும், கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே அமைச்சு இதை கூறியது.
நாட்டில் உள்ள அனைத்து இந்து பெருமக்களுக்கும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியையும், அமைதியையும் நல்வாழ்வையும் கொண்டு வரவேண்டும் என்று அமைச்சு கேட்டுக்கொண்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 5:43 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளரின் ஒப்புதலை இஸ்மாயில் இன்னும் பெறவில்லை
October 30, 2026, 5:38 pm
பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
October 30, 2026, 4:49 pm
மலாக்கா மாநில தேர்தல்: எம்.ஏ.சி.சி நடவடிக்கை அறையைத் திறக்கவுள்ளது
October 30, 2026, 4:25 pm
குளுவாங் நகராண்மை கழகத்தின் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு
October 30, 2026, 2:59 pm
