செய்திகள் மலேசியா
துவாங்கு முஹ்ரிஸுக்கு எதிராக இழிவான பதிவு: இருவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் YANG DI PERTUAN BESAR, TUANKU MUHRIZ TUANKU MUNAWIR-க்கு எதிராக இரு சமூக ஊடக பயனர்கள் இழிவான பதிவை பதிவேற்ற செய்த வழக்கில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
நீதிபதி இல்மாமி அஹ்மத் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்துல்லா எய்டிட் மோக்தார் @ அஹ்மத் துதா (44) மற்றும் அஷாதி ஜூலிஸி ஜைனல் அபிடின் (46) ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233(1)(a)இன் கீழ் இந்த வழக்கு விசாரனை செய்யப்படுகிறது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் வரை சிறை தண்டனை, 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா RM12,000 பிணைத்தொகையுடன், ஒருவரின் உத்தரவாதத்தில் பிணை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதி மீண்டும் தொடங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 12:42 pm
மலேசியாவில் ரோஹின்யா அகதிகளுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது: ஜாஹித்
October 30, 2026, 12:41 pm
உறவை முறித்துக்கொள்ள விரும்பியதால் பெண் மீது அமிலம் வீசப்பட்டது
October 30, 2026, 12:41 pm
கடந்த ஆண்டு 80,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன
October 30, 2026, 12:40 pm
தீபாவளி பதிவு செய்யப்படாத விடுப்புத் தளர்வு குறித்து பொதுச் சேவைத் துறை பரிசீலிக்க வேண்டும்: லிங்கேஸ்வரன்
October 30, 2026, 11:27 am
பெட்ரோனாஸ் 152.4 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளது: அஸாலினா
October 30, 2026, 11:26 am
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 முதல் 11 பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: அர்மிசான்
October 30, 2026, 11:25 am
