செய்திகள் மலேசியா
மலாக்காவில் 8 இடங்களில் பெர்சத்து போட்டியிடுகிறது: அஸ்மின்
அலோர்காஜா:
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சி எட்டு இடங்களில் போட்டியிடுகிறது.
அதில் ஐந்து இடங்களை 2021 இல் தேசிய முன்னணி வென்ற தொகுதிகளாகும்.
பெர்சத்து கிலேபாங், லெண்டு, காடேக், பந்தாய் குண்டோர், பெங்கலான் பத்து, ஆயர் ம்ஜ்ரோ ஆகிய தொகுதிகளை கைப்பற்ற விரும்புகிறது.
அத்துடன் சுங்கை உடாங், பெம்பான் தொகுதிகளையும் பாதுகாக்க விரும்புகிறது.
பெர்சத்து வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து தலைவர்கள் மலாக்காவுக்குத் திரட்டப்படுவார்கள் என்று பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
நாங்கள் மலாக்காவிற்குச் சென்று, பிரச்சாரம் முடியும் வரை இங்கேயே தங்குவோம்.
பெர்சத்து சிலாங்கூருக்கு பந்தாய் குண்டோர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது,
அங்குள்ள நமது வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக அந்த மாநிலத்திலிருந்து தலைவர்களை நான் ஏற்கனவே அழைத்து வந்துள்ளேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 11:12 pm
வாழ்க்கைச் செலவினங்கள் சுமையாக இருக்கும் வரை ஜிஎஸ்டி பரிசீலிக்கப்படாது: அமீர் ஹம்சா
October 29, 2026, 11:10 pm
பாகிஸ்தானில் மோசடி மையத்தில் சோதனை: 130 மலேசியர்கள் கைது
October 29, 2026, 4:46 pm
ஆயிர் லிமாவ் தொகுதியில் பிகேஆர் போட்டி: ஃபுசியா சாலே அறிவிப்பு
October 29, 2026, 4:45 pm
கூலாயில் வீடு தீக்கிரையாக்கப்பட்ட வழக்கு: நால்வர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
October 29, 2026, 2:46 pm
மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்துறை அமைச்சின் கீழ் உள்ள அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும்
October 29, 2026, 1:12 pm
