நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்துறை அமைச்சின் கீழ் உள்ள அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் 

புத்ராஜெயா: 

மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்துறை அமைச்சின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகள், நிறுவனங்கள் துறைகள் தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். 

பேரிடர் ஏற்படும் பட்சத்தில், பணியாளர்கள், சொத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கமாகும்.

அனைத்து அம்சங்கள் தயார் நிலையில் இருப்பதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

மக்களுக்கு வழங்கப்படும் உதவியை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய, பேரிடர் ஏற்பட்ட பிறகு மட்டுமல்லாமல், அதற்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

2026/2027 ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய நிலையில் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset