நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாகிஸ்தானில் மோசடி மையத்தில் சோதனை: 130 மலேசியர்கள் கைது

கோலாலம்பூர்:

பாகிஸ்தானில் உள்ளவர்களைக் குறிவைத்து செயல்படுவதாக நம்பப்படும் ஒரு இணையவழி மோசடி மையத்தில், ராவல்பிண்டியில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 130 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிய செய்தி இணையதளமான புரோபாகிஸ்தானியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, 

பாகிஸ்தானின் தேசிய இணையக் குற்றப் புலனாய்வு முகமை, நீதிமன்றப் பிடியாணை பெற்ற பிறகு, பஹ்ரியா டவுன் எட்டாம் கட்டத்தில் உள்ள காசா டவரில் அமைந்துள்ள ஒரு வளாகத்தில் சோதனை நடத்தியது.

அந்த வளாகத்தில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள், உபகரணங்களை ஆய்வு செய்ததில், மலேசியர்களுக்கு எதிராக நிதி மோசடி செய்வதற்காக அந்த இடம் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவது கண்டறியப்பட்டது.

சந்தேக நபர், வங்கி வாடிக்கையாளர் சேவை அதிகாரி போல் நடித்து, இணைய தொலைபேசி அழைப்பு செயலி மூலம் மலேசியர்களைத் தொடர்பு கொண்டார்.

பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்துள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என அந்த அறிக்கை கூறுகிறது.

பாதிக்கப்பட்டவரின் அழைப்பு, மலேசிய காவல்துறை அதிகாரி போல் நடித்த மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

அதன்படி, சந்தேக நபர்களில் சிலர், காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும்போது காவல்துறை சீருடைகளை அணிந்திருந்ததாகவும், அலுவலகம் போன்ற பின்னணியைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset