நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் லிமாவ் தொகுதியில் பிகேஆர் போட்டி: ஃபுசியா சாலே அறிவிப்பு 

பெட்டாலிங் ஜெயா:    

மலாக்கா மாநில தேர்தலில் பிகேஆர் கட்சி போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 

ஆயிர் லிமாவ் சட்டமன்ற தொகுதியில் பிகேஆர் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை செயலாளர் ஃபுசியா சாலே கூறினார். 

இதற்கு முன் பிகேஆர் 9 இடங்களில் போட்டியிடுவதாக இருந்த நிலையில் தற்போது 10ஆக அதிகரித்துள்ளது 

நம்பிக்கை கூட்டணி ஒட்டுமொத்தமாக 22 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

நாங்கள் நேற்று நியமனக் கடிதங்களை வழங்கினோம், அதனைத் தொடர்ந்து எங்கள் பட்டியலில் மேலும் ஒரு இடத்தை சேர்த்துள்ளோம் என்று ஃபுசியா சாலே சொன்னார். 

இந்த வாரம் சனிக்கிழமை மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெறவுள்ளது. 

16ஆவது மலாக்கா மாநில தேர்தல் நவம்பர் 14ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது 

2021 மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் 28 இடங்களில் 21 இடங்களையும், PH ஐந்து இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் இரண்டு இடங்களையும் வென்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset