செய்திகள் மலேசியா
வாழ்க்கைச் செலவினங்கள் சுமையாக இருக்கும் வரை ஜிஎஸ்டி பரிசீலிக்கப்படாது: அமீர் ஹம்சா
கோலாலம்பூர்:
மக்களின் வருமானம் ஒரு நியாயமான அளவை எட்டாத வரையிலும், வாழ்க்கைச் செலவு இன்னும் சுமையாக இருக்கும் வரையிலும் ஜிஎஸ்டி மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை.
மக்களின் வாங்கும் திறன், வணிக இணக்கச் செலவுகள், நாட்டின் வருவாய் ஈட்டும் திறன் உள்ளிட்ட பல முக்கியக் காரணிகளின் அடிப்படையில் எஸ்எஸ்டி மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினருக்கு ஜிஎஸ்டி பின்னடைவானதாக உள்ளது.
மேலும் அவர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை பொருட்கள், சேவைகளுக்காகச் செலவிடுகின்றனர்.
மறுபுறம், எஸ்எஸ்டி ஒரு முற்போக்கான மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறைக்கு இடமளிக்கிறது.
இதன் மூலம் அரசாங்கம் வரி விதிக்கப்பட வேண்டிய பொருட்கள், சேவைகளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர் மக்களவையில் நடைபெற்ற 2027 வழங்கல் மசோதா கொள்கை நிலை மீதான விவாதத்தின் நிறைவு விழாவில் கூறினார்.
வரிச்சுமையின் ஒரு பகுதியை விலைகள் மூலம் நுகர்வோர் மீது சுமத்த முடிந்தாலும், மக்களின் வாங்கும் திறனைக் கருத்தில் கொண்டே எஸ்எஸ்டியின் வரம்பைத் தீர்மானிக்க முடியும் என்று அமீர் ஹம்ஸா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 11:23 pm
மலாக்காவில் 8 இடங்களில் பெர்சத்து போட்டியிடுகிறது: அஸ்மின்
October 29, 2026, 11:10 pm
பாகிஸ்தானில் மோசடி மையத்தில் சோதனை: 130 மலேசியர்கள் கைது
October 29, 2026, 4:46 pm
ஆயிர் லிமாவ் தொகுதியில் பிகேஆர் போட்டி: ஃபுசியா சாலே அறிவிப்பு
October 29, 2026, 4:45 pm
கூலாயில் வீடு தீக்கிரையாக்கப்பட்ட வழக்கு: நால்வர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
October 29, 2026, 2:46 pm
மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்துறை அமைச்சின் கீழ் உள்ள அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும்
October 29, 2026, 1:12 pm
