நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலாயில் வீடு தீக்கிரையாக்கப்பட்ட வழக்கு: நால்வர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்

பெட்டாலிங் ஜெயா: 

கூலாயில் ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர் 

Yap Eze Hong, 31, Amirul Eizlan Musrinan, 28, Khairul Abd Bahrin, 27, and Chan Jie Mig, 28, ஆகியோர் மீது இன்று ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானபோது இந்த குற்றத்தை மறுத்தனர். 

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி கூலாயில் உள்ள லோரோங் 5, கூலாய் பெசார் எனும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது 

குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 436வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றத்திற்கு, தண்டனை உறுதி செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

நீதிபதி சே வான் ஜைனி சே வான் இப்ராஹிம், யாப் மற்றும் சானுக்கு 8,000 ரிங்கிட் ஜாமீன் மற்றும் அமிருல் மற்றும் கைருலுக்கு 10,000 ரிங்கிட்  ஜாமீன் வழங்கினார்.

ஆவணச் சமர்ப்பிப்புக்காக இந்த வழக்கு நவம்பர் 30 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset