நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் லெவி கட்டணத்தைச் செலுத்த ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை எச்ஆர்டி கோர்ப் தொடங்கியுள்ளது: டத்தோ ஷமிர் அஜிஸ்

கோலாலம்பூர்:

எச்ஆர்டி கோர்ப் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களின் நிலுவையில் உள்ள லெவி கட்டணத்தை செலுத்துவதற்கு உதவும் வகையில் Jom Bayar Levi 2026 என்ற நாடு தழுவிய விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ ஷமிர் அஜிஸ் இதனை கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம், தகுதியுள்ள நிறுவனங்கள் நிலுவையில் உள்ள லெவி தொகைக்கான வட்டி அபராதத்தில் 100 சதவீதம் வரை விலக்கு பெற முடியும்.

நிறுவனங்கள் லெவி தொகையை உரிய காலத்தில் செலுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்குவதுடன், மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்தும்.

மேலும்  நாட்டின் தொழிலாளர் திறன், போட்டித்தன்மையை மேம்படுத்தவும் இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள லெவி தொகையைச் செலுத்துவதை ஊக்குவித்தல், கட்டணச் செலுத்தும் நடைமுறைகளை எளிதாக்குதல், நிறுவனங்கள் தங்களின் லெவி செலுத்தும் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இத்திட்டத்தின் கீழ், நிலுவைத் தொகையைச் செலுத்தும் கால அவகாசத்தைப் பொறுத்து தகுதியுள்ள நிறுவனங்களுக்கு வட்டி அபராதத்தில் பின்வரும் விலக்குகள் வழங்கப்படும்:
• 100 சதவீத விலக்கு: மூன்று மாதங்களுக்குள் முழுத் தொகையையும் செலுத்தினால்.
• 75 சதவீத விலக்கு: மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் தொகையைச் செலுத்தினால்.
• 50 சதவீத விலக்கு: ஏழு முதல் 12 மாதங்களுக்குள் தொகையைச் செலுத்தினால்.
இந்த விலக்குகள் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் நிபந்தனைகள், கணக்குப் பதிவுகளின் சரிபார்ப்பு, ஒப்புதலுக்கு உட்பட்டவை.

நிறுவனங்கள் ஒரே தவணையாகவோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஏற்ப தவணை முறையிலோ பணம் செலுத்தலாம்.

இந்தச் சலுகை வட்டி அபராதத்திற்கு மட்டுமே பொருந்தும். நிலுவையில் உள்ள அசல் லெவி தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும்.

மேலும், நிறுவனங்கள் தங்களின் கணக்குகளைச் சரிபார்த்துக்கொள்ளவும் எச்ஆர்டி கோர்ப் அதிகாரிகளிடமிருந்து நேரடியாக ஆலோசனைகளைப் பெறவும் முடியும்.

இந்தச் சலுகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2026 அக்டோபர் 29 முதல் டிசம்பர் 31 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதன் மூலம் தகுதியுள்ள நிறுவனங்கள் தங்களின் கணக்கு நிலவரத்தைச் சரிபார்த்து, நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்க முடியும் என்று ஷமிர் அஜிஸ் கூறினார்.

எச்ஆர்டி கோர்ப்பின் இந்தப் பயணத்தை மனிதவள துணையமைச்சர் டத்தோ இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset