நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதிவுசெய்யப்பட்ட 23,000 நிறுவனங்கள் 200 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான லெவியை நிலுவையைக் கொண்டுள்ளன: டத்தோ கைருல்

கோலாலம்பூர்:

எச்ஆர்டி கோர்ப் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, பதிவுசெய்யப்பட்ட 23,000 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 200 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வரி நிலுவையைப் பதிவு செய்துள்ளது.

மனிதவள துணையமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்தாஸ் அக்பர் கான் இதனை 

 இந்த நிலுவைத் தொகையை வசூலிப்பதை உறுதி செய்வதற்கான தீர்வுகளையும் சிறந்த அணுகுமுறையையும் எச்ஆர்டி கோர்ப் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ற திறன்களை ஊழியர்கள் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக, நிறுவனங்கள் திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வரி செலுத்துதல்கள் முக்கியமானவை.

நாம் செய்வது தொழில்துறையின் நன்மைக்காகவும், நமது நாட்டின் நன்மைக்காகவும் ஆகும். 

ஏனெனில், மற்ற நாடுகளுடன் போட்டியிட, நமது நாட்டின் தொழிலாளர்கள் தற்போதைய எதிர்காலச் சூழலுக்குப் பொருத்தமான திறன்கள் மற்றும் அறிவுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பின்தங்கிவிடாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய அணுகுமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.

செவி செலுத்துவோம் பிரச்சாரத்தின் தொடக்க விழாவிற்கு பின் அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset