நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியா–சிங்கப்பூர் இடையிலான எரிவாயு விவகாரம் மலேசியாவுக்கு ஒரு பாடம்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கோலாலம்பூர்:

இந்தோனேசியா–சிங்கப்பூர் இடையிலான எரிவாயு விவகாரம் மலேசியாவுக்கு ஒரு பாடமாகும்.

மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் இதனை வலியுறுத்தினார்.

இந்தோனேசியா சிங்கப்பூருக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தைக் குறைத்துள்ள நிலையில், மலேசியா தனது சொந்த எரிசக்தி வளங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும்  உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி,  கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

எரிசக்தி பாதுகாப்பு என்பது பொருளாதாரம்,  தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது.

அனைத்துலக கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் பங்கரிங் தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் மலேசியா கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.

மேலும், பெட்ரோனாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடனான ஒத்துழைப்பையும், சர்வதேச எரிசக்தி உற்பத்தி நாடுகளுடனான உறவுகளையும் வலுப்படுத்தி, நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset