நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தலில் MIPP கட்சி போட்டியிடாது

பெட்டாலிங் ஜெயா: 

மலாக்கா மாநில தேர்தலில் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP போட்டியிடாது என்றும் தேசிய கூட்டணியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் அக்கட்சியின் தலைவர் பி.புனிதன் கூறினார். 

சட்டமன்ற தொகுதிக்காக MIPP கட்சி தனது கொள்கைகளை விற்காது என்று புனிதன் திட்டவட்டமாக தெரிவித்தார். 

மலேசிய இந்தியர்களின் நலன்களுக்கு MIPP கட்சி என்றும் முன்னுரிமை வழங்கும் அதேவேளையில் இந்தியர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று அவர் சொனார். 

MIPP கட்சியைப் பொறுத்தவரை, தேவையற்ற இடங்களைத் துரத்துவதை விட கண்ணியமும் கொள்கைகளுமே முக்கியமானவை. அரசியல் நலன்களுக்காக மட்டும் நாங்கள் கொள்கைகளைத் தியாகம் செய்ய மாட்டோம்.

இந்த ஆண்டு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தனது முதல் போட்டியில் MIPP போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதன் ஐந்து வேட்பாளர்களும் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

16ஆவது மலாக்கா மாநில தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset