செய்திகள் மலேசியா
AKPS தலைமை இயக்குநர் ஷுஹைலி ஜைன் போலிஸ் படைக்குத் திரும்புவார்
புத்ராஜெயா:
மலேசிய எல்லை கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஜைன் போலிஸ் படைக்குத் திரும்புவார் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் கூறினார்.
ஷுஹைலி ஜைன் போலிஸ் படைக்குத் திரும்பும் முடிவானது கடந்த வாரம் எடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவரான ஷுஹைலி, கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி AKPS-க்கு அதன் தலைமை இயக்குநராகப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த மாதம், இரு போலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாக ஷுஹைலி ஜைன் மீது சிப்பாங் மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
இந்நிலையில் AKPS அமைப்பின் தலைமை இயக்குநர் பதவிக்காலம் குறித்து AGC அலுவலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்று ஐ.ஜி.பி காலித் இஸ்மாயில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 11:46 am
மலாக்கா மாநில தேர்தலில் MIPP கட்சி போட்டியிடாது
October 29, 2026, 11:44 am
16ஆவது மலாக்கா மாநில தேர்தல்: அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்
October 29, 2026, 11:07 am
ஸ்பெயின் இரயில் விபத்து: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
October 29, 2026, 10:06 am
eFishery-யில் KWAP செய்துள்ள முதலீட்டில் எந்தவொரு குற்றச் செயல்களையும், ஊழலையும் எம்ஏசிசி கண்டறியவில்லை
October 29, 2026, 10:02 am
மலாக்கா தேர்தலில் 21 தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி போட்டியிடும்: ஃபஹ்மி
October 29, 2026, 9:58 am
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 21 தேசிய முன்னணி வேட்பாளர்கள் கட்சி உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்திட்டனர்
October 28, 2026, 10:50 pm
துன் மகாதீரின் உடல்நிலை சீராக இல்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுரை: முக்ரிஸ்
October 28, 2026, 10:46 pm
