நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

eFishery-யில் KWAP செய்துள்ள முதலீட்டில் எந்தவொரு குற்றச் செயல்களையும், ஊழலையும் எம்ஏசிசி கண்டறியவில்லை

புத்ராஜெயா:

இந்தோனேசிய மீன் வளர்ப்பு தொழில்நுட்ப நிறுவனமான eFisheryயில் ஓய்வூதிய நிதியகம் (KWAP) செய்த முதலீடு குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 13 அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இஃபிஷரியில் KWAP செய்த முதலீடு தொடர்பான ஊழல் அல்லது முறைகேடுகள் அடங்கிய குற்றவியல் தவறான நடத்தைக்கான எந்தக் கூறுகளும் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டறியப்படவில்லை.

பொறுப்பான தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதில், KWAP சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் முதலீட்டாளர் கூட்டமைப்புடனும் ஒத்துழைத்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அதே நேரத்தில், முதலீட்டு மதிப்பை அதிகபட்சமாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் உரிய வழிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அது கூறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset