செய்திகள் மலேசியா
16ஆவது மலாக்கா மாநில தேர்தல்: அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்
புத்ராஜெயா:
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வேட்புமனுத்தாக்கல் படிவம் காலை 9 மணி முதல் 10 மணி வரை அனைத்து 28 வேட்புமனுத்தாக்கல் மையங்களிலும் விநியோகிக்கப்படும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது
வேட்புமனுத் தாளுடன் வேட்பாளர், முன்மொழிபவர் மற்றும் வழிமொழிபவர்; அல்லது அவர்களில் இருவர்; அல்லது அவர்களில் ஒருவர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
போட்டியிட விரும்பும் வருங்கால வேட்பாளர்கள், HPC க்கு முன்பாக விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, நிர்வாக அதிகாரி அலுவலகம் அல்லது மலாக்கா மாநில தேர்தல் அலுவலகத்தில் சரிபார்த்து, முன்பணமாக வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தை அனைத்து வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ கைருல் ஷாஹ்ரில் இட்ருஸ் கூறினார்.
வேட்புமனுத்தாக்கல் இனிதே அமைதியுடன் நடக்க அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 11:46 am
மலாக்கா மாநில தேர்தலில் MIPP கட்சி போட்டியிடாது
October 29, 2026, 11:07 am
ஸ்பெயின் இரயில் விபத்து: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
October 29, 2026, 10:06 am
eFishery-யில் KWAP செய்துள்ள முதலீட்டில் எந்தவொரு குற்றச் செயல்களையும், ஊழலையும் எம்ஏசிசி கண்டறியவில்லை
October 29, 2026, 10:02 am
மலாக்கா தேர்தலில் 21 தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி போட்டியிடும்: ஃபஹ்மி
October 29, 2026, 9:58 am
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 21 தேசிய முன்னணி வேட்பாளர்கள் கட்சி உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்திட்டனர்
October 28, 2026, 10:50 pm
துன் மகாதீரின் உடல்நிலை சீராக இல்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுரை: முக்ரிஸ்
October 28, 2026, 10:46 pm
