நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பெயினில் நடந்த ரயில் விபத்தில் மலேசியர்கள் சம்பந்தப்படவில்லை: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

கடந்த புதன்கிழமை அன்று ஸ்பெயினின் டோலிடோவில் உள்ள உர்தா அருகே இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், மலேசியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டதாக மாட்ரிட்டில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

உள்ளூர் நேரப்படி காலை சுமார் 8.54 மணியளவில் நிகழ்ந்த இந்த மோதலைத் தொடர்ந்து, மாட்ரிட்டில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய பயணிகளில் மலேசியர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும், தேவைப்பட்டால் தூதரக உதவியை ஒருங்கிணைக்கவும், தூதரகம் ஸ்பானிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ரயில் சேவை நடத்துநர்களுடன் தொடர்பில் உள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாட்ரிட் மற்றும் அந்தலூசியா இடையேயான அதிவேக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.

இது தொடர்பாக, ஸ்பெயினில் பயணம் செய்யும் மலேசியர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளைப் பயன்படுத்தத் திட்டமிடுபவர்கள், தத்தமது சேவை நடத்துநர்களிடம் நேரடியாக சமீபத்திய நிலவரங்களைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset