நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரின் உடல்நிலை சீராக இல்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுரை: முக்ரிஸ்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுவின் உடல்நிலை சீராக இல்லை.

இதனால் இன்று பிற்பகல் இங்குள்ள பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில் நடைபெற்ற, மறைந்த துன் டாக்டர் ஹஸ்மா முஹம்மது அலிக்கான தஹ்லீல் விழாவில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

அவரது மகனுமான.டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், தனது தந்தையின் உடல்நிலை சில நேரங்களில் நன்றாக இருந்ததாகவும், அலுவலகம் செல்வது, மக்களைச் சந்திப்பது உள்ளிட்ட தனது வழக்கமான பணிகளை அவரால் மேற்கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.

இருப்பினும், அன்றைய தினம் அவரது உடல்நிலையைப் பொறுத்து, டாக்டர் மகாதீர் சோர்வாக உணர்ந்து ஓய்வு தேவைப்பட்ட நேரங்களும் இருந்தன.

உண்மையில் அவர் அந்த நிகழ்வில் தனது கலைஞர் நண்பர்களுடன் இருக்க மிகவும் விரும்பினார்.

ஆனால் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியதால், தனது வருகையை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

இன்று காலை டாக்டர் மகாதீர், மறைந்த துன் ஹஸ்மாவின் அடக்கஸ்தலத்தைப் பார்வையிட்ட பிறகு இந்த அறிவுரை வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset